பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

5 § ஒரே ஒரு சின்ன விரல்தான் உண்டு. துதிக்கையின் நுனியில் கூர்மையாக இருக்கிறதே, அதைத்தான் விரல் என்கிறேன் ! மூச்சு விடவும், வாசனை அறியவும், உணவை வாயில் திணிக்கவும், தண்ணிர் குடிக்கவும், தண் னிரை எடுத்து உடம்பில் தெளிக்கவும் இந்தத் துதிக்கைதான் உபயோகப்படுகிறது. இதனுல், பெரிய பெரிய மரங்களையும் துரக்குவேன். சின்னஞ் சிறிய புல்லையும் பறிப்பேன். எதிரே புலி வந்தால் அதற்கும் என் துதிக்கையால் ஓங்கி ஓர் அறை கொடுப்பேன் ! . என் முன்னுல் ஒருசிறு பட்டாணிக்கடலையை கீட்டிப் பாருங்கள் ! கீழே விழாமல் அதை கான் எடுத்துத் தின்றுவிடுவேன். தரையில் கிடக்கும் ஊசியைக்கூட என்னுல் சுலபமாக எடுத்துவிட முடியும் ! என் துதிக்கை துனியில் இருக்கிறதே சின்னஞ் சிறு விரல், அது அவ்வளவு நுட்ப மானது. துதிக்கையால் இன்குென்றும் செய் வேன். அதுதான் சலாம் போடுவது ! என்னையும் என் தோழர்களையும் இந்திய யானைகள்’ என்று அழைப்பார்கள். எங்களே இந்தியாவில் மட்டுமல்ல; இலங்கை, பர்மா மலேயா, சையாம் முதலிய இடங்களிலும் கான லாம். எங்களிலே இன்னுெரு வகை உண்டு. ஆப்பிரிக்க யானை' என்று அதற்குப் பெயர். இருவருக்கும் என்ன வித்தியாசம் ஒன்ரு, இரண்டா? பல வித்தியாசங்கள் உண்டு. ; ஆப்பிரிக்க யானைக்குக் காது பெரிதாயிருக் கும். கண்ணும் சற்றுப் பெரிதுதான்." உயரமும்