பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பத்து நாட்களான பிறகு, அம்மாவோடு நானும் நடக்க ஆரம்பித்தேன். ஆனாலும், அப்போது என்னுல் வெகுதூரம் போக முடியவில்லை. மெதுவாக நடந்து நடந்து நானும் அம்மாவும் அவளுடைய பழைய தோழர்களுடன் வந்து சேர்ந்து கொண்டோம். நான் அந்தக் கூட்டத்தில் நுழைந்ததும் எல்லோரும் என்னைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அந்தக் கூட்டத்தில் என்னைப் போல் இன்னும் சில குட்டிகள் இருந்தன. ஏதாவது ஆபத்து என்று தோன்றினால், பெரியவர்களெல்லாம் குட்டிகளாகிய எங்களை நடுவே விட்டுச் சுற்றிலும் வட்டமாக நின்று கொள்வார்கள்.

நான் ஏதாவது தவறு செய்தால், என் அம்மா துதிக்கையால் என்னை அடிப்பாள். மகிழ்ச்சி ஏற்பட்டால், துதிக்கையால் என்னைத் தடவிக் கொடுப்பாள். அடிக்கிற (துதிக்)கைதானே அணைக்கும்!