பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

参2 உடனே அந்தப் பையன் வாய் விட்டுச் சிரித் தான். சிரித்துக் கொண்டே, வரிக் குதிரையா ! இதற்கும் குதிரைக்கும் என்னம்மா சம்பந்தம்? அசல் கழுதை மாதிரியே இருக்கிறது. இது வரிக் குதிரை இல்லையம்மா. வரிக் கழுதை இதுதான் சரியான பெயர்’ என்ருன். பையன் பேச்சைக் கேட்டு அம்மாவும் சிரித்தாள். எனக்குக் கோபம் கோபமாக வந்தது.உடனே அந்தப் பையனுக்குச் சுடச் சுடப் பதில் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. கானு கழுதை? கழுதையைப் போல் நான் காகிதத்தைத் தின்கி றேகு ? இல்லை; கற்ருழையைத் தின்கிறேன? வேண்டுமானுல், இந்த மிருகக் காட்சி சாலையில் வேலை செய்கிறவர்களைக் கேட்டுப் பார். புல், பூண்டு, காரட், கோதுமைத் தவிடு-இவைகளைத் தான் கான் தின்கிறேன்’ என்று சொல்ல கினைத் தேன். ஆனுலும் சொல்ல வில்லை. காரணம், அக்தப் பையன் சொன்னதிலும் ஓரளவு உண்மை இருப்பதால்தான் ! ஒரு விதத்தில் கான் கழுதை இனத்தைச் சேர்க்தவன்தானே ? சாப்பாட்டில் மட்டும்தானு ? இன்னும் எத்த னேயோ விஷயங்களில் எனக்கும் கழுதைக்கும் வேறுபாட்டைக் காணலாம். கழுதை கன்ருகப் பொதி சுமக்கும்; எஜமானனுக்குப் பணிந்து நடக் கும். கான் கொஞ்சம் முரடன். என்னைப் பழக்கு வது சுலபமல்ல. அடிமையாக வாழ்வது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. இந்த மிருகக் காட்சி சாலைக்கு வருவதற்கு முன்பு, ஆப்பிரிக்காவில் ஒருவர் என்னைக் காட்டி லிருந்து பிடித்துவந்து விட்டிலே வளர்த்தார்.