பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

கைகளின் உதவியில்லாமலே உங்களால் கண்களை மூடிக்கொள்ள முடிகிறது. ஆனால், காதுகளை அப்படி மூடிக்கொள்ள முடியுமா ? அல்லது, மூக்கை மூடிக்கொள்ள முடியுமா? உங்களால் முடியாது.ஆனால், என்னால் முடியும். ஆம், உண்மையைத்தான் சொல்லுகிறேன். நான் தண்ணிருக்குள் இருக்கும்போது காதுகளையும், மூக்கையும் இறுக மூடிக்கொள்வேன். ஒரு சொட்டுத் தண்ணிர்கூட அவைகளுக்குள் புக முடியாது!

பகல் நேரம் முழுவதும் நான் தண்ணிருக்குள்ளேதான் இருப்பேன். இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை தண்ணிருக்கு வெளியே தலையைத்