பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

அல்லவா இருக்கும்? ஆம், எனக்குத்தான் மரம் ஏறத் தெரியுமே! பூனையைப்போல் நன்றாக ஏறுவேன்.

பூனை மரம் ஏறுவதற்கும் நான் மரம் ஏறுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு சமயம் ஒரு சிறு கிளையில் நான் காலை வைத்து விட்டேன். அது சடக்கென்று முறிந்து விட்டது! நல்ல வேளை; பக்கத்துக் கிளையைப் பிடித்துத் தப்பித் துக்கொண்டேன். தேன் குடிக்கும் ஆசையில் இப்படிச் சில விபத்துக்களுக்கும் ஆளாவதுண்டு !

மரம் ஏறும்போது பூனையைப் போல் ஏறுவதாகச் சொன்னேனல்லவா? ஆனால், இறங்கும் போது பூனைபோல் நான் தலைப் பக்கமாக இறங்க மாட்டேன். வால் பக்கமாகத் தான் இறங்குவேன். அதாவது நீங்கள் இறங்குகிறீர் ளே, அப்படித்தான்.