பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

என்பதையும் என் மூக்குத்தான் எனக்கு அறிவிக்கிறது.

காட்டுக்குள்ளே சில சமயம் வேட்டைக் காரர்கள் வருவார்கள். அப்போது. ‘டப் டுப்’ என்று துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டதும் எதிர்த் திசையிலே நான் வேகமாக ஓடுவேன். அப்போது நான் போடும் குட்டிக் கரணங்களுக்குக் கணக்கே இருக்காது.

எனக்கு இரண்டு குட்டிகள் உண்டு. சென்ற குளிர் காலத்திலே அவை பிறந்தன. சிலருக்கு மூன்று குட்டிகள் பிறப்பதும் உண்டு. என் குட்டிகள் சின்னஞ்சிறு குட்டிகள். அவை எப்போதும் என் முதுகிலே சவாரி செய்துகொண்டேயிருக்கும். நான் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் அவை கீழே விழுவதில்லை. அவைதான் என் முதுகிலுள்ள உரோமத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுகின்றனவே! எப்படிக் கீழே விழும்?