பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

தேன், சிறிது நேரத்தில் என் தங்கை பிறந்தாள். நாங்கள் இருவரும் கர்ப்பத்திலே 120: நாட்கள் இருந்தோம்.

நான் பிறந்து ஒரு வாரம் வரை எனக்குக் கண் தெரியவில்லை. கண் தெரிந்ததும், என் உடம்பை நானே ஒரு முறை பார்த்துக் கொண்டேன். என் உடம்பு முழுதும் மங்கலான சிறுசிறு புள்ளிகள் இருந்தன. ஆனால், என் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ அந்த மாதிரிப் புள்ளிகள் இல்லை. என் தங்கையின் உடம்பைப் பார்த்தேன். அவளுக்கும் என்போல் புள்ளிகள் இருந்தன. இதைப் பற்றி அம்மாவிடம் கேட்டேன். குட்டியாக இருக்கும் போது இப்படித்தான் இருக்கும். நாள் ஆக ஆக மறைந்துவிடும் என்று அம்மா பதில் சொன்னாள்.

என்னிடத்திலும், என் தங்கையிடத்திலும் என் அம்மாவுக்குப் பிரியம் அதிகம். எங்கள் மேல் உயிரையே வைத்திருப்பாள். அம்மாவும் அப்பாவும் வேட்டைக்குப் புறப்பட்டுப் போகும்போது, “நாங்கள் திரும்பி வரும்வரை இங்கேயே இருக்க வேண்டும். வெளியிலே தலை காட்டக் கூடாது” என்று எச்சரித்துவிட்டுத்தான் அம்மா போவாள்.

மூன்று மாதங்கள் வரை அம்மா எங்களுக்குப் பாலுாட்டி வளர்த்தாள். அப்புறம், அம்மா கொண்டுவந்து கொடுத்த ஆகாரத்தைத் தின்று வளர்ந்து வந்தோம். மான் குட்டி, முயல் குட்டி, காட்டுப் பன்றி இவைகளைத்தான் அம்மா அடிக்கடி கொண்டு வருவாள்.

எனக்கும் என் தங்கைக்கும் கொஞ்சம் விவரம் தெரிந்தவுடனே, அம்மா எங்களை அருகிலே அழைத்தாள். குழந்தைகளா, இன்று முதல் உங்-