பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 இரை கிடைக்கும்போது கான் அவைகளைக் இறக்கி விடுவேன். ஏதேனும் சத்தம் கேட் அங்கேயே பத்திரமாக உட்கார்ந்துகொள்ளும். டால், அவை சட்டென்று என் முதுகிலே ஏறி ஆபத்தென்று தெரிந்தால், கானும் உடனே குட்டிகளுடன் வேகமாக ஓடிவிடுவேன். நானும் என் குட்டிகளும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களல்ல. இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். அதிலும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் எங்களில் பல வகை உண்டு. ஹிமாலயக கரடி என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, அதுவும் என்னேப் போல் கறுப்பாகத்தான் இருக்கும். ஆணுல், மார்பிலே V என்று வெள்ளேயாக ஒர் அடையாளம் இருக்கும். வட துருவத்துக்குப் போனுல், வெள்ளைக் கரடியைப் பார்க்கலாம். கரடி களிலே பெரியது வெள்ளைக்கரடிதான். அதற்கு அடுத்தபடியாகச் சொல்லலாம், வட அமெரிக்கா வில் உள்ள பழுப்புக் கரடியை. கண்ணுடிக் கரடி என்று ஒருவகை உண்டு. அதன் கண்களைச் சுற்றி வெள்ளையாக இருக்கும். அதனுடைய மார்பும் வெள்ளையாகவே இருக்கும். பார்த்தால், சர்க்கஸ் கோமாளி மாதிரியே இருக்கும் ! அந்தக் கண்ணுடிக் கரடியைப் பார்த்து விட் டுத்தான், நீங்கள் எங்கள் எல்லோரையுமே கோமா ளிகளாக்கப் பார்க்கிறீர்கள் போலிருக்கிறஇi. சர்க்கஸ்காரர்களும், செப்படி வித்தைக்காரர்களும் எ ங் க ளே க் காட்டிலிருந்து பிடித்துக்கொண்டு