பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



இப்போதே பற்பல செய்வீர்-என்றும்
இன்புட னேஇருந் துய்வீர்.

கூடை முடைந்திட வேண்டும்-உயர்
ஆடையும் நெய்திட வேண்டும்.

பெட்டிகள் செய்திடக் கற்பீர் - பெரு
மேசையும் செய்துபின் விற்பீர்.

சீனச் சிறுவரைப் பாரீர்-உயர்
சீமைச் சிறுவரைப் பாரீர்

யாவரும் கைத்தொழில் கற்பார்-கலை
யாவும் சிறப்புற நிற்பார்.



26