பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





                     


                           1. எங்கள் பாப்பா

                      எங்கள் பாப்பா நல்ல பாப்பா.
                      என்னைக் கண்டால் சிரிக்கும் பாப்பா.

                      அம்மா-அப்பா என்னும் பாப்பா.
                      ஆ-ஈ என்றே படிக்கும் பாப்பா.

                      பாப்பாவுக்கு முத்தம் கொடுங்கள்
                      பாப்பா உமக்கு முத்தம் கொடுக்கும்.