பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடும் புகைப்படப் பெருமை-இது
      பத்திரி கைவிற்ற பாலகன் உரிமை.
நாடு புகழ்கின்ற தன்றோ-நாமும்
      நற்பெயர் பெற்று நிலவுதல் என்றோ ?

                                       
(பேரு)

வான விமான உயர்ச்சி-இரு
      வாலிபர் கூடி உழைத்த முயற்சி.
ஈனமன் றோநமக் கென்றும்-இந்த
      உலகினுக் குதவுதல் இலைஎனில் ஒன்றும்

(பேரு)

மோட்டார் எனும் வண்டி பெற்றோம்-மற்றும்
      மின்சார வண்டியும் தீபமும் உற்றோம்.
காட்டாள் எனப்படு வோமோ-ஒன்றும்
      கண்டறி யாமலே வாழ்ந்திடு வோமோ

(பேரு)

பற்பல சாத்திரம் கற்போம்-இந்தப்
      பாரினில் நாமும் சிறப்புற நிற்போம்.
அற்புத யந்திரம் செய்வோம்-நம்மை
      அனைவரும் கொண்டாடிப் போற்றிட உய்வோம்.

(பேரு)

42