பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளஞ்சேட் சென்னியின்
எழில்தவ மைந்தன்
ஏங்குதல் புரிவானோ ?
உளந்தான் நடுக்குறத்
தீயினில் வெந்தே
இறந்தொழிந் திடுவானோ? 14

அறுத்தனன் தளைகளை
உடைத்தனன் பூட்டினை
அணுகினன் இடைவெளியை ;
பொறுத்திலன் பாய்ந்தனன்
புலியென மதில்மிசை
பொற்றோள் கொட்டினனே.15

சூழ்ந்தது சுடரொளி
சுட்டது கால்களைச்
சொல்லுதல் எளிதலவே.
வீழ்ந்தன கனல்குவை
தீய்ந்தன கால்களும்
வீரனும் அஞ்சிலனே.16

அரிமா எனவே
அஞ்சா நெஞ்சுடன்
தாண்டினன் அனலினையே.
பரிமா எனவே
படர்ந்தனன் புவிமிசை
பகைவர்கள் நாணிடவே.17

கால்கள் தீயில்
கரிந்தன அதனால்
கரிகால் பெயர்பெற்றான்.
நூல்கள் புகழ
வாழி அவன்பெயர்
நூறா யிரம் ஆண்டே.18

50