பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



தந்தை இவை கூறமகன்
தாழ்மையுடன், “ தந்தாய்,
இந்தமொழி கேட்டிடவோ
இங்குவந்தேன் எந்தாய் ; 7
துள்ளிவிழுங் குதிரையினைத்
துடுக்கடக்கி ஓட்டி
டில்லிநகர் மன்னருக்கென்
திறமையினைக் காட்டி, 8

நமதுகுலப் பெருமையினை
நாடறியச் செய்வேன்;
தமதருளே வேண்டுகிறேன்
தந்தருள்வீர் உய்வேன்.” 9.

4.வெற்றி பெற்ற விரன் :
மைந்தன் கூறிய மாற்றம் கேட்டே
மனது மகிழ்ந்தனரே ;
தந்தேன் தந்தேன் தந்தேன்,' என்றே
தந்தை மொழிந்தனரே.
விட்டனன் ஓலை வீரனுக் கென்றே
டில்லி நகர் மன்னன்
பட்டன மெங்கும் பறையறைந் தனனே
பகதூர் ஷாமன்னன். 2
மாண்புடை மன்னர்கள் கரிபரி தேர்களில்
மகிழ்வுடன் வந்திருந்தார் ;
ஆண்களும் பெண்களும் அணியணியாகவே
அங்கே வந்திருந்தார். 3
அடதட தட'வெனத் தெய்வக் குதிரையும்
சபை முன் வந்ததுவே!
கடகட கட’வெனக் கண்டோர் நடுங்கிடக்
கனைத்து நின்றதுவே !

4.

58