பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

43. கடவுள் வணக்கம்

ஆண்டவரே எமைக் காத்திடுவீர்;
அன்பாய்க் கடைக்கண் பார்த்திடுவீர்
கல்விச் செல்வம் தரவேண்டும்.
கம்பன் போல்புகழ் பெறவேண்டும்.
அவ்வை அறிவும் அனுபவமும்
அமையத் தொழுவோம் அனுதினமும்
செல்வம் வேண்டும்; சீர்வேண்டும் ;
சிறந்த நல்ல பேர்வேண்டும்.
பெற்றோர் செய்த தவம்என்றே
பேச வேண்டும் பலர்நன்றே.
வீரம், வாய்மை, உடல்வன்மை,
வேண்டும் இன்னும் பலநன்மை.
உதவி செய்யும் குணம்வேண்டும் ;
உம்மை மறவா மனம்வேண்டும்.
அன்னை தந்தை நலம்வேண்டும் ;
ஆசிரி யர்தம் அருள்வேண்டும்.
சுற்றம் வேண்டும் சூழ்ந்திடவே
சுகமாய் நாங்கள் வாழ்ந்திடவே.

62