பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. மாமா வந்தார்


எங்கள் மாமா வந்தார்;
எனக்குக் காசு தந்தார்.
மிடுக்காய்க் கடைக்குச் சென்றேன்;
மிட்டாய் வாங்கித் தின்றேன்.

எங்கள் அண்ணா வந்தார்
பலகை புத்தகம் தந்தார்
பள்ளிக் கூடம் போனேன்;
நல்ல பையன் ஆனேன்.

7