பக்கம்:எங்கே போகிறோம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 எங்கே போகிறோம்?

பேப்பரால் மூடி, காற்றுப் புகாதபடி மண்ணைப் பரப்பிக் குழியை நிரப்பிவிட வேண்டும். மூன்று மாதத்திற்குப் பிறகு, குழியில் வைக்கப்பட்ட புற்களை எடுத்துக் கால் நடைகளுக்கு வழங்கவேண்டும்.

பசும்புல்லை விரும்பி உண்பதைப் போல, மர இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்பதில்லை. அதனால், தொடக்க காலத்தில் பசும் புற்களுடன் தழைகளைச் சேர்த்து அளித்துக் கால்நடைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

மர இலைகளை 12 மணி நேரம் நிழலில் உலர்த்திக் கொடுத்தாலும் கால்நடைகள் விரும்பி உண்ணும். மர இலைகள் மேல் உப்புக் கரைசலைத் தெளித்து அல்லது வெல்லம் கலந்த தண்ணீரைத் தெளித்துத் தந்தாலும் மாடுகள் விருப்பத்துடன் தின்னும்.

கால்நடைகளின் வளர்ப்பில் வேளாண்மைக் காடுகளின் பங்கு மகத்தான்து. எவ்வளவு புல் தீவனம் போட்டாலும் ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலில் ஏற்படும் திருப்தி வராது. ஆதலால், ஊர்தோறும் மேய்ச்சல் தரைக்ள் அமைக்க வேண்டும். ஒரு மாடு, சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மேய 1 முதல் 14 ஏக்கர் நிலம் தேவைப்படும்.

கால்நடைப் பொருளாதாரத்தில் செம்மறி ஆடுகள் உரிய இடத்தைப் பெற்று விளங்குகின்றன. ஆழ்கூள முறையில் வெள்ளாடுகள்-தலைச்சேரி ஆடுகளை வளர்ப்பது நல்ல இலாபகரமான தொழில். வெள்ளாடுகளை ஆழ்கூள முறையில் வளர்க்க வேண்டும். இதனை ‘கொட்டில் வளர்ப்பு’ என்றும் கூறுவர். இதனால் வெள்ளாடுகளால் ஏற்படக் கூடிய காடுகள் பாதிப்பைத் தவிர்த்திடலாம்.