பக்கம்:எங்கே போகிறோம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 எங்கே போகிறோம்?

நாடு, மாநிலம், மாவட்டம் பின்தங்கியது என்று அடிக்கடி பலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. எந்த நாட்டில்-மாநிலத்தில் மாவட்டத்தில் அல்லது ஒரு ஊரில் மனிதசக்தியை முற்றாக உழைப்பில் பயன்படுத்தாதவர்களும் அல்லது மிகக் குறைவாகப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்களோ, அந்தப் பகுதி பின்தங்கியதாகத்தான் இருக்கும்!

அதுபோலவே, பொருள் உற்பத்திக்குப் பயன்படக் கூடிய நிலம், நீர், மற்றும் இயற்கை வளங்கள், தாதுப் பொருள்கள் எங்கு முற்றாகப் பயன்படுத்தப் படவில்லையோ அந்தப் பகுதியும் பின்தங்கியதாகவே இருக்கும். இதனை ஒளவையார்,

“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”

என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனியியல்பு ஒன்று இல்லை, எங்கு தல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும். ' “நல்லவர்” என்பதற்கு இன்றைய உலக வழக்கில் உள்ள “அப்பாவி” “செயலற்றவர்” என்ற பொருள் அன்று இல்லை!

அறிவு, ஆற்றல், ஆளுமை, உழைக்கும் பண்பு அனைத்தும் பெற்றவர்களையே பண்டைக்காலத்தில் நல்லவர் என்றனர். ஆதலால், மனிதர்கள் முறையாகப் பயன்படும் இடங்களில் எல்லாம் பொருள்வளம் இருக்கும்; பொருள் வளம் செழித்த நிலையில், சமுதாய மேம்பாடு விளங்கும்.

இலக்கியங்கள், செல்வங்கள் அனைத்திலும் உயர்ந்த செல்வம் வேளாண்மை வழிச் செல்வமே என்று போற்று-