பக்கம்:எங்கே போகிறோம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11. சமுதாய மேம்பாட்டில்
ஆன்மிகத்தின் பங்கு


பலர் கூடி வாழ்வது சமுதாயம். பலர் கூடி வாழ்தல் வேண்டும். அப்போதுதான் சமுதாயம் தோன்றும். வாழ்க்கை வரையறுத்த கால எல்லையையுடையது. அந்த எல்லைக்குள் மற்றவர்கள் நலனுக்குரியன செய்து, அவ்வழி ஆன்மாவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; முன்னேற வேண்டும். நமது வாழ்க்கை கண்ணாடி வளையல்கள்போல உலைந்து போகக்கூடியது. வாழ்க்கை நிலையில்லாதது. நிலையில்லாதனவற்றைக் கொண்டு, நிலையானவற்றை அடைதலே வாழ்க்கையின் குறிக்கோள்.

நன்றாக வாழவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு விதி தனியாக இல்லை. எதைச் செய்தாலும், அழகாகச் செய்தலும், பயனுறச் செய்தலுமே நல்வாழ்க்கை. குறித்த ஒரு நோக்கத்துக்காகத் தான் வாழ்க்கையை நடத்தவேண்டும். குறிக்கோளுடைய வாழ்க்கையை நடத்துவதுதான் அதிர்ஷ்டம். வாழ்க்கை முழுவதும் விரும்பக் கூடியது ஊழியம் புரியும் சக்தியேயாம். அதுவும் சுயநலமற்ற நிலையில் ஊழியம் புரியும் சக்தியாக அமைய வேண்டும்.

வாழ்க்கையை முறையாக வாழ்ந்தால், உழைப்போடு கூடிய வாழ்க்கை நடத்தினால், அவ்வாழ்க்கையே ஒரு தொழில்தான். வாழ்க்கை இன்பமானது அன்று; இன்பமாக அமையவும் அமையாது. தைரியத்தோடும், துணிச்சலோடும் வாழ்க்கையை நடத்தப் பழகிக் கொள்ள