பக்கம்:எங்கே போகிறோம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச் சிந்தனைகள் O 43

வேண்டும். நாம் எல்லாருமே அந்தத் திசையில்தான் செல்லவேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனே உழைப்புக்கு மதிப்புக் கொடுத்து, திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசு கொடுத்தான்! திருநாவுக்கரசர் செய்தது கைத் திருத்தொண்டு. பார்வாழத் திருவீதிப் பணி செய்தது- அதாவது தெருவை சுத்தம் செய்தது.

மதுரையில் எழுந்தருளியுள்ள ஆலவாயண்ணல், வைகையாற்றங்கரையில் கொற்றாளாய்க் கூலிக்கு மண் சுமந்த வரலாறு, உழைப்பின் உயர்வை உணர்த்துவதாகும். இளைய பாரதமே எழு!விழித்தெழு! குறிக்கோளை அடையும் அளவும் நிற்காதே! உழைத்து வரலாறு படைப்பீர்களாக!

இன்றைய இளைஞர்கள் பலர் பத்தாவது படித்து விட்டாலே மண்வெட்டி தூக்க விரும்புவதில்லை. இது மிகவும் தவறு. “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று வள்ளுவத்தை உணர்தல் வேண்டும். உடலுழைப்பு இகழப்படும் நாட்டில் தேக்கமும், அழிவும் உண்டாகி வளர்ச்சிப் பாதை கடினமாகி விடுகிறது. உழைப்பு இகழப்படும் சமுதாயத்தில் பண்டப் புழக்கம் குறையும்.

அதனால் வலுவான வாழ்வு இல்லை. கலை இல்லை; மகிழ்ச்சி இல்லை. உழைப்பு விரும்பிப் போற்றப்பட்டால் வாழ்வும் ஒளியும் வளர்ந்து உழைப்பே இன்சுவையாக மாறும், அளவற்ற மகிழ்ச்சியும் உழைப்பு வேள்வியும் நடைபெறும்.

ஆதலால், அறிவுழைப்பாளிகள் ஏழைகள் செய்யும் உடலுழைப்பைச் செய்ய முன்வர வேண்டும். உடல் உழைப்பாளிகள் அறிவாளிகளுடன், அறிவியல் மேதை