பக்கம்:எங்கே போகிறோம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. பொருளாதாரச் சிந்தனைகள்

இந்த வாரச் சிந்தனை-பொருளாதாரத்தில் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பது. நாம் போகும் திசை சரியானது தானா? அல்லது எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா? ஏனெனில் மானுட வாழ்க்கையின் அடிப்படையே பொருள்தான். வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள்; அதனால்தான் பொருளாதாரம் என்று பெயர் வைத்தார்கள் போலும்.

மானுடத்தின் உடல் சார்ந்த வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவை பொருள். பொருள் என்னும் சொல் விரிவான பொருளாக்கம் தரும் சொல்லாகும். உணவு, உடை, இருக்க இடம் முதலியன எல்லோருக்கும்வேண்டிய அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய நிலையில் மேலும் தேவைகள் வளரும்.

தேவைகளை உழைப்பின் மூலம் அடைவது முதல் நிலை. ஆரம்பநிலை. காலப்போக்கில், சொத்து உருவாக்கும் ஆர்வத்தால், சொத்து, நிலம் முதலியன சேர்த்து, நிலப்பிரபுக்களாகி, பின் மெள்ள மெள்ள சுரண்டும் பொருளாதார நடைமுறைக்கு வந்துவிட்டான் மனிதன். இது வளரும் சமூகத்திற்கு நலம் பயக்காது.

ஒரு சமுகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டுமானால் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்ற வேலைகள் நடைபெறவேண்டும் இது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல அப்போதுதான் முழுமையான வளர்ச்சியைக் காணமுடியும். மானுட சமுதாயம் பொருளாதாரம், கல்வி,