பக்கம்:எங்கே போகிறோம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 எங்கே போகிறோம்?

நிலங்கள் நம்மிடத்தில் இல்லையென்று கூறமுடியாது. நாட்டளவில் நிலங்கள் உள்ளன. நமது பகுதிகளில் செம்மண் சரளை மணல் நிலம் நிறைய உள்ளது.

விவசாயத்தை ஒரு தொழிலாகக் கருதிச் செய்ய வேண்டும். ஏனோ தானோ என்று செய்தால் விவசாயம் போதிய பயனைத் தராது. இன்று விவசாயத் தொழிலில் அதிகமான பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கினரையாவது வேறு தொழில்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இந்திய மக்கள் தொகையில் 4.2 பேர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களில் 3.3 மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் விவசாயிகளிடம் நிலம் நபருக்கு 4.8 ஹெக்டேராக இருந்தது. இப்போது நபருக்கு 1.5 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.

பொதுவாக ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் பராமரிப்புக்குக் குறைந்தது ஐந்து ஏக்கர் தேவை. விளை நிலத்தின் அடிப்படையில் மக்கள் செறிவு 2.5க்குள் இருத்தல் நல்லது. இப்போது விவசாயம் செய்யப் பெறும் நிலங்களைவிட வரப்புகளே அதிகம்.

இதேபோல நெல் சாகுபடி செய்யும் நிலம் குறைந்து வருகிறது. முன்பு சாகுபடி செய்யும் நிலம் 27 இலட்சம் ஹெக்டேராக இருந்தது. இபபோது 21 இலட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணப் பயிர்கள், கரும்பு, முதலியன உற்பத்தி செய்வது, வீட்டு மனைகளாக மாற்றி விற்பது போன்ற மனப்போக்கு வளர்ந்து வருவதால் விவசாய நிலம் குறைந்து வருகிறது.

இந்தப் போக்கு நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட வழி வகுத்ததாகி விடும். முன்பே நமக்கு, பயறு