பக்கம்:எச்சில் இரவு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பகுத்தறிவு மனைவி
தொகுத்தறியும் கணவன்


ஒரே கோத்திரத்தில் உதித்தவளையும், தேகத்தில். கொடிய நோயுடையவளையும், பழிமொழியுடைய குடும்பத்தில் பிறந்தவளையும், விரும்பத்தக்க பெருமையில்லாத பெண்ணையும், பாம்பின் பெயரையும், பறவைகளின் பெயரையும், மலையின் பெயரையும், நட்சத்திரங்களின் பெயரையும் உடைய பெண்ணைத் திருமணம் செய்யலாகாது என்று இந்நாட்டுச் சருகு சாத். திரங்கள் கூறுகின்றன.

அத்தகைய சருகு சாத்திரங்களையும், சடங்குச் சிந்தனைகளையும், ஏற்றுக் கொள்ளாத நரிக்குடி நாராயணசாமியோ, பாம்பின் பெயரைக் கொண்ட 'நாகம்மை' என்பவளை இராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டவன்.

பாம்பின் பெயரைக் கொண்ட அவன் மனைவி அவனை எத்தனையோ முறை தீண்டியிருக்கிறாள். அவள் அவனைத் தீண்டிய போதெல்லாம் மஞ்சத்திற்குத்தான் சென்றிருக்கிறானேயன்றி, அவன் மருத்துவமனைக்குச் சென்றதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/101&oldid=1318775" இலிருந்து மீள்விக்கப்பட்டது