பக்கம்:எச்சில் இரவு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


அவன் அவளைப் பலமுறை அடித்திருக்கிறான். அவள் அவனிடம் அடிவாங்கிய போதெல்லாம், அவள் சிரித்ததுண்டே யன்றி, "ஐயோ! வலிக்கிறதே" என்று அழுததில்லை.

அவள் தீண்டியும் அவனுக்கு விஷமேறியதில்லை.

அவன் அடித்தும் அவளுக்கு வலித்ததில்லை.

உலகக் குத்துச்சண்டை வீரனாகிய முகமது அலியைப் போல் நரிக்குடி நாராயணசாமியும், ஆறடி ஐந்தங்குல உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் உடையவன்.

முகமது அலியின் மனைவி வெரோனிகாவைப் போல், அவன் மனைவி நாகம்மையும் ஆறடி உயரமும், அழகான தோற்றமும் உடைவள்.

அவளது தமிழ்முகம் ஒரு தாமரைப்பூ! அவளுடைய கன்னங்கள் பழகிக் கனிவதற்கு முன்பே பருவத்தால் கனிந்த மதுர மாங்கனிகள், மூடும் மேடுகளோ, குறிஞ்சி நிலத்தில் வளரும் கோங்கின் அரும்புகள். வீங்கி, இறுக்கமுற்றுப் பக்கத்தில் பருத்து மேலாடைக்குள் உறங்கும் மெல்லிய சதைப் பந்துகள்.

அவளுடைய நிள்விழிகள், நிலவானத்தின் இறக்குமதி! சேல் கெண்டைகள் போட்டுவைத்த சிறுசேமிப்பு! அவளது கருங்கூர்தலோ, அவசரத்தில் அவிழ்ந்து தொங்கும் இருண்ட மேகம்! வெளிச்சத்தைக் கண்டு விலகிச் செல்லாத விநோத இருட்டு!

அவள் ஒரு பகுத்தறிவு மனைவி.

அவன் ஒரு தொகுத்தறியும் கணவன்.

அன்றிரவு, நிலா முற்றத்தில் அவன் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவன் ஒரு கட்டிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/102&oldid=1314402" இலிருந்து மீள்விக்கப்பட்டது