பக்கம்:எச்சில் இரவு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


அமர்ந்து, கூடலூர் வீரபத்திர படையாச்சி இயற்றிய 'லாகிரிச்சிந்து' என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன், அவளைப் பார்த்து இந்த. நூற்றாண்டில், மதுவிலக்கைப்பற்றி முதன் முதலில் பாடல் பாடியவர் யார் தெரியுமா? என்று கேட்டான்.

"சிறுமணவூர் முனுசாமி முதலியார்" என்றாள் அவள்.

"இல்லை அல்லை, அவர் பாடுவதற்கு முன்பே அதாவது, 1903-ஆம் ஆண்டிலேயே கூடலூர் வீர பத்திர படையாச்சி என்பவர்தான் முதன் முதலாக மதுவிலக்கைப் பற்றிப் பாடல் பாடியவர்" என்றான் அவன்.

மதுவிலக்கைப்பற்றி முதலில் யார் பாடியிருந்தாலென்ன? இந்நாட்டில் குடிகாரர்களின் தொகை இன்னும் குறையவில்லையே" என்றாள்.

"ஆமாம், நீ கூறுவதுபோல், குடிகாரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் நம் நாட்டில் கூடுதலாகிக் கொண்டு வருகிறதே தவிர குறையவில்லை" என்றான்.

"இந்த நாட்டில் பாமர மக்கள் மட்டுமா குடிக்கிறார்கள்? நன்கு படித்தவர்களும் அல்லவா குடிக்கிறார்கள். இந்தக் காலத்தில்தான் இப்படியென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரிய மனிதர்கள் சிலரும் இப்படித் தான் குடித்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள்" என்றாள்.

"ஆமாம் விஸ்வாமித்திரர் ஒருநாள் தம் சேனை யோடு, வசிஷ்டர் ஆச்சிரமத்திற்குச் சென்றபோது வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்கும். அவரது சேனைகளுக்கும் விருந்து வைத்தாராம், அவ்விருந்தில் மதுவும் வழங்கப்பட்டதாம். இந்த நேரத்தில் மற்றெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/103&oldid=1314388" இலிருந்து மீள்விக்கப்பட்டது