பக்கம்:எச்சில் இரவு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

நிகழ்ச்சியும் என் நினைவுக்கு வருகிறது. திருக்குற் றாலத்தில் வாழ்ந்த தருமி என்னும் பார்ப்பனன் ஒருவன் வேசியர் வலையில் சிக்குண்டு, செல்வத்தையெல்லாம் இழந்து, தன் காமக் கிழத்தியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டானாம், ;அவளோ, தண்ணீருக்குப் பதிலாக அவனிடத்தில் மதுவைக் கொடுத்தாளாம்" என்றான் அவன்.

"இப்படிப்பட்ட வசிஷ்டர்களும், விசுவாமித்திரர் களும் தருமிகளும் பெருகிக் கொண்டிருந்தால் குடிப் பவர்களின் தொகை எங்கே குறையப் போகிறது? மது விலக்குக் கொள்கை தான் எங்கே வெற்றி பெறப் போகிறது?" என்று கூறினாள்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, திரு வள்ளுவர் அன்றைய குடிகாரர்களைப் பார்த்து "உண் ணந்க கள்ளை" என்று கூறினார். அந்தக் குடிகாரர்கள் அவர் பேச்சைக் கட்டார்களா ? கேட்கவில்லை. போறிஞர் ஏம் சந்திர சூரி என்பவர், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே சுமார் பதினெட்டு நாடுகளில் மது விலக்கை அமுல் நடத்தும்படி செய்தார். அவ்வாறு செய்தும் குடிப்பவர்களின் தொகை குறையவில்லை, தந்தை பெரியார் அவர்கள் தமிழ் காடு காங்கிரஸ் தலை வராக இருந்த போது, தமது தோட்டத்திலிருந்த ஐந்நூறு தென்னை மரங்களையும் வெட்டச் செய்தார். மரங்கள் தான் குறைந்தன" மதுகுடிப்போர் தொகை குறையவில்லை என்றான்.

அதிருக்கட்டும், உங்கள் நண்பர்களில் பலர் குடிப் பார்களாமே, அவர்களோடு செல்லும் நீங்கள், அவர்கள் குடிக்கும்போது - நீங்கள் மட்டும் குடிக்காமலா இருந்திருப்பீர்கள்?” என்று கேட்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/104&oldid=1314376" இலிருந்து மீள்விக்கப்பட்டது