பக்கம்:எச்சில் இரவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8


நான்கு திசைகளுக்கும் நடுவிலே, நின்று கொண்டிருந்தவள், அவன் குறிப்பிட்ட மூவிடத்து முல்லைகளையும் கேட்டுமகிழ்ந்து, இருவிழிகளால் ஒரு முறை அவனை இச்சையோடு நோக்கினாள்.

அப்போது அவனுக்கு ஆசைப்பசி அதிகரித்தது. அந்தக் கருங்குயிலின் ஓசைப்பசி ஓயவில்லை. அதனால் அது, தன் குறடுவாய் திறந்து கூவிக்கொண்டே இருந்தது.

சிறிய கல்லொன்றை எடுத்து, அந்தக் கருங்குயிலின் மீது அவள் விட்டெறிந்தாள். அந்த வரிக்குயில் பளிச்சென்று பறந்து சென்றது.

“சொல்லால் அடித்தால் ஓடாதென்று, ஒருகல்லால் அடித்ததும், அந்தப் பாட்டுப்பறவை பறந்துபோய் விட்டது பார்த்தீர்களா?” என்றாள் அவள்.

“கல்லால் அடிக்காமல், நீ கற்கண்டால் அடித்தாலும், அந்தக் குயில் பறந்துதான் போயிருக்கும். ஏனென்றால் கல்லும், கற்கண்டும் அதற்கு ஒன்றுதான்” என்றான் அவன்.

அவன் நடந்தான். அவளும் நடந்தாள்.

ஒரு நெல்லி மரத்தின் இலைப்பந்தலின்கீழ் இருவரும் சிறிதுநேரம் நின்றனர்.

நெல்லி இலையை உற்றுப் பார்த்த அவள் அவனை நோக்கி ‘சிற்றிலே நெல்லி’ என்று சங்கப் புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியிருக்கின்றனர், என்றாள் அவள்.

"எள்ளின் இலையைவிட, விடதாரிஇலை மிகச்சிறியது. எல்லா இலைகளையும் விட வாழைஇலைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/18&oldid=1244858" இலிருந்து மீள்விக்கப்பட்டது