பக்கம்:எச்சில் இரவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


மிகப்பெரியது. எனவேதான், ‘வாழை இலையை’ ‘அகலிலைவாழை’ என்று கூறினர் என்றான் அவன்!

“ஆமாம்! குயில் நெல்லிக்கனியே உண்ணும் என்கிறார்களே; இது உண்மையா?” என்று கேட்டாள்.

"உண்மைதான். ஆனால், மற்றக் கனிகளைவிட மாங்கனியைத்தான் குயில் மிகவும் விரும்பி உண்ணும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும் மாங்கனியைத் மிகவும் விரும்பி உண்பாராம்” என்று கூறினான் அவன்.

"அப்படி என்றால் இனிமேல் நீங்களும் மாங்கனியை அடிக்கடி உண்ணுங்கள் அத்தான்” என்றாள் அவள்.

“ஏன்?” என்று கேட்டான் அவன்.

"அவரைப்போல் நீங்களும் மகாவித்வானாகி விடலாமல்லவா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

“மாங்கனியை உண்பதனால் மகாவித்வானாகவோ, தாடி வைத்துக் கொள்வதனால் தந்தை பெரியாராகவோ, ஆகிவிடமுடியாது பெண்ணே” என்றான் அவன்.

"அதிருக்கட்டும், “பூங்குயிலை நாம் மாங்குயில் என்று அழைக்கிறோமே? இதற்கென்ன காரணம்?” என்று அவள் அவனைக் கேட்டாள்.

அவன் அவளை நோக்கி, "பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிட வேங்கைப்புலி விரும்புவதுபோல, பனை மடலில் கூடுகட்டிட, அன்றில் பறவை ஆசைப்படுவது போல, கருங்குயில் பெரும்பாலும் மாமரத்திலேயே தங்கி இருந்திட விரும்புவதால், நாம் அதனை மாங்குயில் என்று அழைக்கின்றோம். இதனை அறிந்தே, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும்,‘மாங்குயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/19&oldid=1244859" இலிருந்து மீள்விக்கப்பட்டது