பக்கம்:எச்சில் இரவு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11


அத்தி மரங்களையும், ஆலமரங்களையும் வைத்து, வளர்க்கச் சொன்னான் என்கிறார்களே, அது ஏன்?” என்று அவனைக் கேட்டாள்.

"ஒரு காலத்தில் நம்நாட்டுப் பெண்களுக்குப் பால் வற்றிப் போனாலும் போகலாம் எனக் கருதிப், பால் வரும் மரங்களாகிய அத்தி மரங்களையும் ஆலமரங்களையும் அவன் வளர்க்கச் சொல்லியிருக்கலாம் என நான் எண்ணுகிறேன்” என்றான் அவன்.

‘நீங்கள் பெண்ணினத்தையே பழிக்கிறீர்கள்’ என்றாள் அவள்.

“நான் அவர்களைப் பழிக்கவுமில்லை, வேண்டாமென்று கழிக்கவுமில்லை” என்று கூறிக் கொண்டே அவன் நடந்தான். அவளும் நடந்தாள்.

“சீர்காழி அருணாசலக் கவிராயரைப் பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று அவன் அவளைக் கேட்டான்.

“நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” அவருடைய இராம நாடகக் கீர்த்தனைகளையும் நான் படித்திருக்கிறேன்” என்றாள்.

அப்போது அவன் அவளை நோக்கி, “அருணாசலக்கவிராயருக்கு, அசோகனைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ, ஆனால் அசோக மரத்தைப் பற்றிய செய்திகள் அவருக்கு அதிகமாகத் தெரியும். அக்கவிராயர், மணலி சின்னையா முதலியார் வீட்டில் கம்பராமாயணச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்த போது, ஒருநாள் அம்முதலியார் கவிராயரை நோக்கி “இன்று தமிழிலும், வடமொழியிலும் வல்லவரான பூம்பாவைக் குழந்தை முதலியார் இவ்விடம் வருகைதர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/21&oldid=1244861" இலிருந்து மீள்விக்கப்பட்டது