பக்கம்:எச்சில் இரவு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14


வில்லை. பிறகு அவனை நோக்கி “இதற்கு விடை எனக்குத் தெரியவில்லை. நீங்களே சொல்லுங்கள் அத்தான்” என்றாள்.

உடனே அவன் “கொக்கரக்கோ” என்று கூவிக்காட்டினான்.

அவள் சிரித்துக் கொண்டே “சேவல்தானே” அது? என்று கேட்டாள்.

"ஆம்" என்றான் அவன்.

"அத்தான் கோழியை ஞானியோடு ஒப்பிடுகின்றார்களே அது ஏன்?” என்று கேட்டாள்.

"ஞானி, முதலில் தன்னை அறிந்து கொண்டு, தான் அறிந்தவற்றைப் பின்னர் இத்தரணிக்கு அறிவிக்கின்றான். அதுபோலவே, கோழியும் முதலில் தான் விழித்தெழுந்து பின்னர் இத்தரணியில் உறங்குவோரையும் விழித்தெழச் செய்கிறது. எனவேதான் கோழியை ஞானியோடு ஒப்பிடுகின்றனர்” என்று கூறினான்.

மண்படாமல், கடல்நீரில் கண்படும் சூரியனை அவள் அப்போது உற்று நோக்கினாள். தீச்சினம் தணிந்த சூரியனை அவனும் உற்று நோக்கினான்.

“பெட்டைக்கோழி முட்டையிடுவதுபோல் இந்தச் சூரியனும், எப்போதோ ஒரு காலத்தில் ஒரு முட்டையிட்டதாம். அந்த முட்டைதான் இந்த உலகம் என்று பழங்காலத்தில் வாழ்ந்த பர்மிய மக்கள் நம்பி வந்தார்களாம்” என்று அவளிடம் கூறினான்.

"அப்படி என்றால், அவர்களுக்கு இது ‘கோழிச்சூரியன்’, நமக்கெல்லாம் இது ‘ஆழிச்சூரியன்’ என்று அவள் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/24&oldid=1245102" இலிருந்து மீள்விக்கப்பட்டது