பக்கம்:எச்சில் இரவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20


அவன், அப்போது அவளை நோக்கி, “இந்த நிலா வெளிச்சத்தில் நீ இப்போது மிகவும் அழகாக இருக்கிறாய்” என்றான்.

‘இப்போது மட்டுமென்ன, நான் எப்போதுமே அழகாக இருப்பவள்தான். செம்பொன்னும், சிவந்த ரோஜாவும் எப்போதுமே அழகாகத்தானே இருக்கும் எனறாள்.

“உன்னிடம் தனமும் இருக்கிறது.

உன் பேச்சில் நூதனமும் இருக்கிறது.

உன் மலர்விழியில் மயக்கமும் இருக்கிறது. அதில் தேவையற்ற மையும் இருக்கிறது என்றான்.”

“என்ன! தேவையற்ற மையா?” கண்னுக்குமையிடுவது தேவையற்றதா? என்று கேட்டாள்.

"ஆமாம்! உண்னும் உணவுக்கு நெய் தேவைதான். மின்னும் கண்ணக்கு மை தேவையா? பெண்கள் தங்கள் கண்களுக்கு மையிட்டுக் கொள்வது கவர்ச்சிக்காகவும், ஆண்களின் உள்ளங்களைக் கவர்வதற்காகவும் தானே” என்றான்.

“இல்லை! மங்கையர் மையிட்டுக் கொள்வது ஆண்களின் நன்மைக்காகவே அன்றி, அவர்கள் வாழ்வை நாசப்படுத்துவதற்காக அல்ல” என்றாள்.

“ஆண்களின் நன்மைக்காகவா மங்கையர் மையிட்டுக் கொள்கின்றனர்?”

“ஆமாம்! கச்சுத்தன்மையுள்ள வெப்பம், ஒரு பெண்ணின் உடலில் இருப்பதைவிட, அவளுடைய கண்ணில் அதிகமிருக்கிறது. அந்த வெப்பத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/30&oldid=1245110" இலிருந்து மீள்விக்கப்பட்டது