பக்கம்:எச்சில் இரவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24


இப்படிப்பட்ட ஓட்டை மனிதர்களை நாம் வேட்டைக்கு அனுப்பினாலும், வெற்றியோடு திரும்பமாட்டார்கள். அவர்களைக் கோட்டைக்கு அனுப்பினாலும் அரசியலே அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றாள்.

அப்போது, அவர்களைக் கடந்து உடும்பு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட அவன், அவளை நோக்கி, "இதோபார் உடும்பொன்று ஓடுகிறது” என்றான். அவள் அந்த உடும்பைப் பார்த்தாள். அப்போது அவன் அவளிடத்தில்,

“உடும்பு நூறாண்டுகள் உயிரோடிருக்கும். பாம்பு ஆயிரம் ஆண்டுகள் உயிரோடிருக்கும். குளத்தில் போட்டசேலை, எத்தனையோ ஆண்டுகள் அப்படியே இருக்கும்” என்றான்.

"இவற்றைப் போல் ஒருவன் நெடுங்காலம் வாழ்வதால் மட்டும் பயனில்லை. சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரைப் போன்றும், ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியைப் போன்றும், முப்பதாண்டுகளே இவ்வுலகத்தில் வாழ்பவனாக இருந்தாலும், அதற்குள் அவன் பல அரிய செயல்களைச் செய்பவனாக இருத்தல் வேண்டும். மேலைநாட்டில் பிறந்த மோசாத் என்னும் புகழ்பெற்ற பாடகன், தனது 9வது வயதிலேயே பெருங்கச்சேரிகளில் பாடத்தொடங்கிவிட்டான். பேஸ்ஸே என்பவன் 15வது வயதிலேயே சொற்பொழிவாற்றுவதில் சிறந்து விளங்கினான். வாஷிங்டன் இர்வின் என்பவன் 17வது வயதிலேயே பெரிய பத்திரிகையாசிரியனாகி விட்டான். அலெக்சாந்தர் 21வது வயதினிலேயே திக்விஜயத்திற்குக் கிளம்பிவிட்டான். வில்லியம் பிட் என்பவன், 24வது வயதிலேயே இங்கிலாந்தில் நிதியமைச்சராகப் பதவியேற்றான். இவர்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/34&oldid=1197628" இலிருந்து மீள்விக்கப்பட்டது