பக்கம்:எச்சில் இரவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25


போன்று மக்கள் அரிய செயல் புரிதல் வேண்டும் என்றாள்.

அதனைக் கேட்ட அவன், அவளை நோக்கி, “அவர்களைப் போன்று அரிய செயல் செய்ய என்னால் இயலாவிடினும், சில உரிய செயல்களை என்னால் செய்ய முடியும். ஜான் பன்வார்ட் என்னும் ஓவியன், மூன்று மைல் நீளமுள்ள துணியில் பெரிய ஓவியமொன்றை ஆறு வருடகாலம் பாடுபட்டு அருமையாகத் தீட்டினானாம் அவனைப்போல் ஆறு வருட காலம் தொடர்ந்து ஓவியம் தீட்ட முடியாது என்றாலும், ஆறு வருட காலம் தொடர்ந்து உன்னை முத்தமிடமுடியும். இதுதான் என்னால் முடிந்த அரிய செயல்” என்று சொல்லிக் கொண்டே அவளைத் தழுவுவதற்கு முயன்றான். அவள் நாணத்தோடு நகர்ந்தாள். அவன் அவளுடைய கரத்தைத் தொட்டுத் தடவியபடி, “குறிஞ்சி பாடிய கபிலரின் கரங்கள் மிகவும் மெல்லியதாக இருந்ததெனச் சங்கப்பாடல் ஒன்றில் படித்தறிந்தேன். இப்போது உன் கரங்களைப் பிடித்தறிந்தேன்” என்றான்.

“முடிவதற்கு முன் நடத்தும் முதல் ஒத்திகையா இது என்று அவள் கேட்டாள்.”

குற்றாலக்குறவஞ்சியைப்போல் ஒரு குறவஞ்சியும், முக்கூடற்பள்ளுப்போல் ஒரு பள்ளும், வருணகுலாதித்தன் மடல்போல் ஒரு மடலும் கிடையாது. ஆடல் பாடல், அழகு இம்மூன்றும் ஒருங்கமைந்து விளங்கும் உன்னைப்போல் பேரழகு படைத்த பெண்ணும் இவ்வுலகில் கிடையாது. அழகுதான் பெண்களின் கையிருப்பு. நீ ஓர் அதிசயமான நெருப்பு. நீ பூக்களில் சிறந்த தாமரைப்பூ அதுவும் எட்டாம் நாளில் மலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/35&oldid=1197657" இலிருந்து மீள்விக்கப்பட்டது