பக்கம்:எச்சில் இரவு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காத்திருந்த குமரனும் கனிந்திருந்த குமரியும்

குறிஞ்சி! அங்கே உறுதியான குன்றுகளும், உயர்ந்தோங்கிய மலைகளும் உண்டு. அந்தக் கருங்கல் 'கொப்புளத்தில்', வேங்கை மரம் போன்றவனின் வீடு மில்லை; அம்மரத்தின்மீது படரும் மிளகுக்கொடி போன்றவளின் விடுமில்லை.

முல்லை! அங்கே விதைகளின் வயிற்றில் பிறந்த மரங்களும், விலங்குகளின் வீடுகளாகிய காடுகளும் உண்டு. அந்தக் 'கோவலர் கோட்டத்தில்' காட்டாறு போன்றவனின் வீடுமில்லை; குளிர் துாங்கும் குறுஞ்சுனை போன்றவளின் வீடுமில்லை.

பாலே! அங்கே கண்களை ஏமாற்றக்கூடிய கானல் நீரும், பகற்பொழுதெல்லாம் காய்ச்சலோடு படுத்துக் காண்டிருக்கின்ற பாதைகளும் உண்டு. அந்த "நெருப்பு நிலத்தில்" பாலையாழ் போன்றவனின் வீடு மில்லை. அந்த யாழில் பிறக்கும் பஞ்சுரப்பண் போன்ற வளின் வீடுமில்லை.

நெய்தல்! அங்கே கதிரவன் முகம் பார்க்கும் கண்ணாடிக் கடலும்; காலில் மிதிபடும் நிலாநிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/38&oldid=1297745" இலிருந்து மீள்விக்கப்பட்டது