பக்கம்:எச்சில் இரவு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

அவள் பிறந்த ஊர் இராதா கல்லூர். திருவருணைக் கலம்பகம் பாடிய சைவ எல்லப்ப காவலர் பிறந்த ஊரும் அதுதான். அவரும், அந்த அழகியும் ஒரே ஊரில். பிறந்தவர்கள் என்றாலும், இருவரும் ஒரே நேரத்திலோ, ஒரே நூற்றாண்டிலோ பிறக்கவில்லை. அந்த நேரிசை நாவலர், சுட்டுப் பொசுக்கும் பகல் நேரத்தில் பிறந்தவராம். அந்த மருதநிலத்து மங்கையோ, சுடாத இரவிலே பிறந்தவளாம். பெற்றோரின் உறவில் உருவாகி, இரவில் பிறந்த அக்கட்டழகி, பிறக்கும்போது அழுதுகொண்டே பிறந்தவள் என்றாலும், வளரும்போது அன்றாடம் சிரித்துக் கொண்டே வளர்ந்தாள். “மழவும் குழவும் இளமைப் பொருள' என்று தொல்காப்பியம் கூறுவதுபோல, அவள் கொழுந்துக் குழந்தையாக இருக்கையில், தொட்டிலிலும் பெற்றோரின் தோள்மீதும் வளர்ந்தாள். புல்லும் பொறாமையும் மிக விரைந்து வளர்வதைப்போல, அவள் வளர்ந்து கொண்டே வந்தாள். தன் அங்கத்தைத் தங்கமாக்கிக் கொண்டு, சிவந்த தோல்மேடுகளைச் செவ்விளநீராக்கிக் கொண்டு, ஒரு காள் அவள் ஒரு கொக்கோகக் குமரியானாள். தொட்டில் பருவத்தில் உதடுகளால் உரையாடி வந்தவள், கட்டில் பருவம் வந்தபின், தன் கண்களால் பேசத் தொடங்கினாள். - - - எதிர்விட்டு இளைஞன் ஏகாம்பரம், அவளைக் காணும் போதெல்லாம் அவளிடம் தன் கண்களால் பேசிவந்தான். - - - ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/40&oldid=1405346" இலிருந்து மீள்விக்கப்பட்டது