பக்கம்:எச்சில் இரவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33

அவள் அவனை நோக்கி 'அத்தான்! பகல் நம்மைப் பிரித்து வைக்கிறது. இரவுதான் நம் இருவரையும் இணைத்து வைக்கிறது' என்று கூறினாள். "ஆமாம்! அந்தப்பகல், நம்மிருவரையும் ஒரு கண்ணால் பார்க்கிறது. இந்த இரவுதான், ஆயிரம் கண்களால் நம்மை அன்றாடம் பார்க்கிறது” என்றான். ஆம் அத்தான்! இரவுக்கு ஆயிரம் கண்கள். பகலுக்கு ஒன்றே ஒன்றுதான் என்றாள் அவள். 'இரவுக்கு மட்டுமா ஆயிரம் கண்கள், இந்திரனுக்கும் ஆயிரம் கண்கள்தான். பகலுக்கு மட்டுமா ஒரு கண், பஞ்சாப் மன்னன் ரஞ்சித்சிங்குக்கும் ஒரே ஒரு கண்தான்' என்றான் அவன். அப்படியா! அதோ பாருங்கள், அந்தப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் ஒரு படகைப்போல் இருக்கிறதல்லவா? என்று கேட்டாள். ஆமாம் அதைத்தான் ரேவதி நட்சத்திரம் என்று சொல்லுவார்கள் என்றான் அவன். ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்துள்ள அசுவினி நட்சத்திரத்தை அவள் உற்றுப் பார்த்தாள். பார்த்து விட்டு அவனை நோக்கி 'கெளதம புத்தரும், பெரியாழ்வாரும் அசுவினி நட்சத்திரத்தன்றுதான் பிறந்ததாகச் சொல்லுகியார்கள்’ என்றாள். - - பிறந்திருக்கலாம். யார் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலென்ன? ஒருவன் மற்றொருவனுக்கு எரி நட்சத்திரமாக இருக்கக்கூடாது' என்று கூறினன் அவன். அந்த அசுவினி நட்சத்திரம் குதிரையின் தலை போல் இருக்கிறதல்லவா என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/43&oldid=1405350" இலிருந்து மீள்விக்கப்பட்டது