பக்கம்:எச்சில் இரவு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42



புலியின் பற்கள் வளைந்திருப்பதால், அது தன் வாயை மூடும்போது மேல் வாய்ப்பற்களும் கீழ்வாய்ப் பற்களும் நன்ருகப் பொருந்தி பற்றிக் கொள்ளும். அவ்வாறு பற்றிக்கொள்ளும் பற்களை விரைவில் கழற்றுவதென்பது கடினம். அது போலவே அவளுடைய பார்வைப் பேச்சிலும் வேர்வை வெப்பத் திலும் அகப்பட்டுக் கொண்டவர்கள், அவ்வளவு எளிதில் மீண்டுவர முடியாது.

இளவேனிற் பருவத்தில் ஒருநாள்

ஈர நிலா, தன் இரவல் வெளிச்சத்தை வழங்கும். இரவு நேரம்.அந்த நாள் முதல் இந்தகாள் வரையில் தன் முழு உடலைக் காட்டாமல், முகத்தை மட்டுமே காட்டி வரும் உருண்டை நிலா, அந்த ஊமை வானத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.

கிலா முற்றத்தில் கின்றபடி, அவள் அந்த நிலவை, அந்த அக்தி கிலவைக்கூர்ந்து கோக்கினுள். நோக்கித் தன் விளம்பரவிழிகளைத் தொங்கும் கிலவின் மீது தேக்கி

'நிலவே! நிலவே! சற்று நில்!” என்ருள். அது நிற்கவில்லை. இங்கே வா! என் இல்லத்திற்கு வா' என அழைத்தாள்.

- • :כי - - s

ஆதி காலததுச சதை அழைத்தும், சூடிக

கொடுத்த கோதை அழைத்தும், வராத வெண்ணிலா,

அந்தப் பேதை அழைத்தும் வரவில்லை. மீண்டும் அவள் அக்த நிலவைப் பார்த்து,

நிலவே மக்கள் கடந்து செல்லுவதற்கு மண்ணில் தான் பாதைகள் இருக்கின்றன. விண்ணில் பாதைகளே இல்லை. இருந்தால், என் வீட்டுக்கு நீ வராவிட்டாலும் உன் வீட்டுக்கு நான் வந்திருப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/52&oldid=1001267" இலிருந்து மீள்விக்கப்பட்டது