பக்கம்:எச்சில் இரவு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


பெறவேண்டியதைப் பெற்றுச் செல்லும் தந்திரக் காரர்கள் தானே அவர்கள்!” என்ருள் தங்கம்.

நாம்தான், பிறருக்குப் படுக்கைப் படகுகளாக இருக்கிருேம். நம் குலத்தில் பிறந்த பெண்கள் எல்லோ ருமே அப்படியா இருக்கிரு.ர்கள் என்ருள் ஊசி.

'ஒழுக்கத்தோடு வாழும் பெண்கள் பலர், கம்மி

னத்தில் இன்றும் இருக்கிருர்கள். அன்றும் இருந்திருக் கிருர்கள். அவர்கள் இல்லறத்திற்குரியவர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிருர்கள். அச்சுதமங்க லத்துக் கோயிலுக்குரிய தேவரடியாள் ஒருத்தியை மேற்குலத்தான் ஒருவன் திருமணம் செய்துகொண்ட தாகக் குலோத்துங்கனது 11-ஆம் ஆண்டுச் சாசனம் கூறுகிறது. மற்றும், இரண்டாம் இராச ராசன் ஆட்சியில் திருவொற்றியூர்த் தேவரடியாளான சதுரள் சதுரி என்பவளே, காகன்காடன் என்பவன் மணந்து கொண்டதாகவும் மற்ருேர் கல்வெட்டு கூறு கிறது” என்ருள் தங்கம்.

- ‘அப்படியா! அந்தக் கல்வெட்டுகள் எங்கிருக் கின்றன? அவற்றை கான் படித்துப் பார்க்கவேண்டும்’ என் ருள் ஊசி.

'அவற்றை நீ பிறகு படித்துப் பார்க்கலாம். முதலில் வீடு தேடி வந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்க்கலாம் வா’ என்று அவளே அழைத்துக் கொண்டு, வீட்டிலுள்ள கூடத்துக்கு வந்தாள்.

கூடத்தில், ஒரு-குத்துவிளக்கு எரிந்து கொண்டி ருந்தது. விலையுயர்ந்த கட்டிலின் மீது, வீணை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இசை, கடனம், நாடகம் முதலிய கலைகளிற் சிறந்த புலமை உடையவனும், ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்தவனுமாகிய மகேந்திரவர்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/57&oldid=1001300" இலிருந்து மீள்விக்கப்பட்டது