பக்கம்:எச்சில் இரவு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


"ஏன்' எனறு கேட்டாள் ஊசி. - -

அவர்கள் இருவரும் எக்காரணத்தாலோ வாழ்வில் வெறுப்புற்றுத் தங்கள் பட்டுச் சேலைகளின் முன்தானே யைக் கட்டிக்கொண்டு, மற்றப் பகுதியை பிறரிடம் கிழித்துக் கொடுத்துவிட்டு, அந்த ஏரியிலேயே வீழ்ந்து. இறந்து போனர்களாம். அவர்கள் வளர்த்த நாயும் அவர்களோடு ஏரியில் வீழ்ந்து இறந்துவிட்டதாம்" என்ருள் தங்கம். . . .

அவள் கூறியதைக் கேட்டதும், ஐயோ பாவம் என்று வருந்தினுள் ஊசி. - .

அப்போது அவள் வீட்டுக்குக் கவிஞன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டவுடன், தளர்ந்துபோன தாய்க்கிழவி ஓடிவந்து வரவேற்ருள். -

தைப்பதற்கும், மொய்ப்பதற்கும் உரிய இந்த வேளையில் காம் இங்கே இருப்பது தடங்கலாக இருக்கு மெனக் கருதி, தங்கத்திடம் விடை பெற்றுக் கொண்டு ஊசி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்ருள். காம வெறியோடு வந்த கவிஞன் தாய்க்கிழவியைப் பார்த்து, -

'தங்கம் எங்கே?' என்று கேட்டான். "தட்டான் தட்டுகின்ற தங்கம் இந்தத் தரையில் இருக்கிறது. நீங்கள் தேடுகின்ற தங்கம் அக்த அறையில் இருக்கிறது” என்ருள் தாய்க்கிழவி.

'நீர் பாய்ச்சுதற்குரிய நிலம். கலமாக இருக் கிறதா?’ என்ருன் அவன்.

'கலமாகவும் இருக்கிறது. அடிக்கடி அது நனைந்து கொண்டுமிருக்கிறது' என்ருள் தாய்க்கிழவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/60&oldid=1001303" இலிருந்து மீள்விக்கப்பட்டது