பக்கம்:எச்சில் இரவு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


ஆடவரைச் சேர்வதில்லை என்று விரதம் பூண்டிருந்தவளாகிய சுரமஞ்சரி என்பவள், சீவகனின் இசையைக் கேட்டு மயங்கி, அவனுக்கு மாலையிட்டது போல், பூங்கோதை என்பவளும், பொய்யா மொழியின் இன்னிசையைக் கேட்டு மயங்கி, அவனைக் காதலித்து, அவனது பருவசுகத்திற்குப் பாத்திரமானவள்.

அன்று சனிக்கிழமைக்கு அடுத்த நாள். அதாவது கீழே இற்று விழாமல், மேலே நாள் தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் ஞாயிறென்னும் சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமை.

மலராய்ந்து பூத்தொடுக்கும் மாலை நேரம்

ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி நடந்து செல்லும் நண்டைப் போல, மகர மாதத்துச் சூரியன் சிறிது சாய்ந்தபடி வானத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பொய்யாமொழி பூங்கோதையைப் பார்த்து "இந்தச் சூரியன் மேற்கே போகும் வெயில்! நாம் கிழக்கே போகும் ரயில்!" என்று சொன்னான்.

"இந்த ரயிலுக்கு நம் பருவக் காதல்தான் அன்றிடம் பச்சைக் கொடி காட்டி வருகிறது" என்றாள் பூங்கோதை.

"வெளிநாட்டிலிருந்து நம்நாட்டு மயில் வரவில்லை. ஒடும் ரயில்தான் வந்தது. புதிதாக நம்நாட்டுக்கு வந்த புகைவன்டி என்னும் ரயிலைப் பற்றி பூவை கலியாண சந்தர முதலியாரும், அவருடைய மாணவராகிய பேறை சகந்நாதபிள்ளை என்பவரும்தான் முதன் முதலாகப் பாடல் பாடினர்" என்று கூறினான் பொய்யாமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/70&oldid=1317970" இலிருந்து மீள்விக்கப்பட்டது