பக்கம்:எச்சில் இரவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


"அப்படி என்றால், அவர்களது காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான்களும் மற்றவர்களும்"...என்றாள் பூங்கோதை.

"வழக்கம் போலவே மயிலைப் பற்றியும், குயிலைப் பற்றியும், ஆண்டவனைப் பற்றியும், தில்லைத் தாண்ட வனைப் பற்றியுமே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தனர்" என்றான் பொய்யாமொழி.

"அப்படியா! அப்படியென்றால் அவர்களெல்லாம் கண்ணிருந்தும் குருடர்கள் காலிருந்தும் முடவர்கள்." என்றாள் பூங்கோதை.

"அவர்களைப் போலவே இக்காலத்திலும் பலர் இருக்கின்றனர்" என்றான் அவன்.

"அதிருக்கட்டும், புகை வண்டியைப் பற்றி அப்புலவர்களிருவரும் பாடிய அந்தப் புதிய பாடலை எனக்குச் சொல்லுங்களேன்" என்று அவள் அவனைக் கேட்க, உடனே அவன்

பாருங்கள் ஒர்நொடியில் பன்னுமிடம் போய்வரலாம்

வாருங்கள் என்னதடை மாநிலத்தீர்-நீருங்கள்

காலால் நடவாமல் காசுமிக நல்காமல்

மேலாக வாழவினி மேல்.


என்னும் பாடலே அவளிடத்தில் கூறினான். அவ்வெண்பாவைக் கேட்ட அப்வெண்பாவை அப்புதிய பாடலையும், அப்பழைய புலவர்களையும் பாராட்டினாள்.

அந்திவானம், அப்போது சேரன் செங்குட்டுவனின் முன்கோபத்தைப் போல் சிவந்து கொண்டிருந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/71&oldid=1317980" இலிருந்து மீள்விக்கப்பட்டது