பக்கம்:எச்சில் இரவு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


அதற்குப்பிறகு, இருவரும் அந்தக் கடலைப் பார்த்தனர்.

"கடல் மிகவும் ஆழமுடையது" என்றாள்.

"ஆழமுடையதாக இருப்பதால்தான், கடலுக்கு 'ஆழி' என்னும் பெயர் வந்தது." என்றான்.

"கடலில் ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும்; ஆயிரம் இடம்புரிச் சங்குகள் கூடிய ஒரிடத்தில் வலம்புரிச் சங்கும்; ஆயிரம் வலம் புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு பாஞ்ச சன்யமும் இருக்கு மென்று சொல்லுகிறிர்கள். கிடைத்தற்கரிய பாஞ்சசன்யம் என்னும் சங்கைத்தான் கிருஷ்ணபகவான் தன் கையில் வைத்திருந்தாராம்" என்றாள் அவள்.

"அப்படியா! அப்படியென்றால் அந்த மகாவிஷ்ணு கடத்தல் மன்னனாகிய மஸ்தானைக் காட்டிலும் மிகப் பெரிய கடத்தல் மன்னனாக இருக்கவேண்டும்" என்றான் அவன்.

"பாற் கடலில் மகாவிஷ்ணு பள்ளிகொண்டிருந் தாராமே! உண்மையில் பாற்கடல் என்பதாக ஒன்று இருந்திருக்குமா? என்று கேட்டாள் அவள்.

"பாற்கடல், தயிர்க்கடல் முதலிய ஏழுவகைக் கடல்கள் இருந்ததாக எழுதி வைத்திருப்பதெல்லாம் புராணிகரின் புரட்டாகும். எழுகின்ற கடலைத்தான் இவர்கள் எழுகடல் என்றும்; ஏழுகடல் என்றும் சொல்லி ஏமாற்றி வருகின்றனர் எழுகடல் உண்டேயன்றி உலகில் ஏழுவகைக் கடல்கள் இருந்ததில்லை." என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/74&oldid=1318633" இலிருந்து மீள்விக்கப்பட்டது