பக்கம்:எச்சில் இரவு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


பேரறிஞர்களும், புலவர் பெருமக்களும் அவனை 'வடிமபலம்ப நின்ற பாண்டியன்' என்று பாராட்டினராம்.

மேலைக் கடலின் நடுவே, சில தீவுகளில் வாழ்ந்த சிற்றரசர்களை அடக்க வேண்டி, கடலின் ஆழத்தையும், அதன் பரப்பையும், ஆர்ப்பாட்டம் செய்யும் அலைகளையும் கண்டஞ்சாமல், அவை தன் பின்னே செல்ல கடலில் முன்னேறி பகைவர்களே வென்று திரும் பினானாம். சேரன் செங்குட்டுவன், கடலை பிறக்கிடும்படி ஓட்டியவன் என்பதால் சான்ரறோர்கள் அவனை கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று பாராட்டினராம். நானும் அலைகளின் ஆரவாரத்தைக் கண்டு. அஞ்சுவதில்லை என்றான் அவன்.

அப்படியென்றால், நீங்களும் ஒரு சேரன் செங்குட்டுவன் என்று சொல்லுங்கள் என்றாள் அவள்.

"நான் ஒரு சேரன் செங்குட்டுவன் மட்டுமல்ல! அன்றாடம் உன்னைச் சேரும் செங்குட்டுவனும் நான் தான்" என்றான் அவன்.

அவள் சிரித்தாள்.

பிறகு இருவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு தாழை மரங்கள் மிகுதியாக வளர்ந்திருந்த இடத்தில் வந்தமர்ந்து, உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவன் அவளைப் பார்த்து,

சூரியனைக் கண்டால் தாமரை மலரும்

சந்திரனைக் கண்டால் அல்லி மலரும்

மின்னலைக் கண்டால், தாழை மலரும் என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/78&oldid=1318891" இலிருந்து மீள்விக்கப்பட்டது