பக்கம்:எச்சில் இரவு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொய்யாப் பழமும்

கொய்யும் பழமும்

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருநீலகண்டகாயனர் என்பவர், சிறிது காலம் தம் மனேவியைத் தொட்டுப் பழகியும், பின்னர் அவர் அவ்வம்மையாரை நெடுங்காலமாகத் தொடாமலேயே பழகியும் வந்தாராம். ஆனல் உதயசூரியன் அப்படி யல்ல. அது, தாமரைப் பூக்களைத் தொடாமலேயே பழகி வரும் ஒரு நெருப்பு நாயகன். - அது, தன் வெளிச்சத்தால், ஆண்களையும் பெண் களையும் அடையாளம் காட்டும். அவர்களின் ஆயுட் காலத்தையும் அது அன்ருடம் அளந்து காட்டும்.

சளி பிடித்த சந்திரன் இருக்கிறதே அது சூரியனைப் பார்த்து, 'என் உடன் பிறப்பே' என்று அழைக்க முடியாது. ஏனென்றல், சந்திரனும் சூரியனும் சேர்ந்து பிறக்கவில்லை. . . . . ...'

தான் பெற்ற குழந்தையைப் பார்த்து தாயொருத்தி தான் 'என் ரத்தத்தின் ரத்தமே” என்று அழைக்க முடியுமேயன்றி, மாற்ருந்தாய் அவ்வாறு அழைக்க முடியாது. அதுபோலவே, தன் வயிற்றிலிருந்து பிதுங்கிப் பிறந்த பூமியைப் பார்த்து என் ரத்தத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/87&oldid=1001336" இலிருந்து மீள்விக்கப்பட்டது