பக்கம்:எச்சில் இரவு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


"பூனையின் வாலைத்தான் யாரும் பிடித்திழுக்க முடியும். புலியின் வாலை யாருமே பிடித்திழுக்க முடியாது?" என்றான் அவன்.

"உங்களால் முடியாதென்றால் வேறு யாராலும் முடியாதென்று ஏன் சொல்லுகிறீர்கள். மாவீரன் மருது பாண்டியன் புலியின் வாலைப் பிடித்து பரபரவென்றிழுத்து, பின்னங்கால்களைப்பற்றிச் சுழற்றித்தரையில் அடித்துக் கொன்று விடுவானாம்" என்று கூறினாள் அவள்.

"அதைக் கேட்டு வியப்படைந்து, அப்படிப்பட்ட மாவீரனா அவன்?" இருக்கட்டும் விரைவில் நானும் ஒரு புலியின் வாலை இழுத்துக் காட்டுகிறேனா இல்லையா என்பதைப் பார்" என்றான் அவன்.

உடனே அவள் அவனைப் பார்த்து, வேண்டாம் வேண்டாம்! நீங்கள் ஒரு புலியின் வாலையும் பிடித்திழுக்க வேண்டாம். நம் வீட்டு எலியின் வாலேயும் பிடித்திழுக்க வேண்டாம். நீங்கள் சும்மா இருந்தால் அதுவே போதும் என்றாள்.

'சும்மா இரு' என்று உபதேசம் செய்த துறவிகளாலேயே சும்மா இருக்க முடியவில்லையே என்னால் எப்படி சும்மா இருக்க முடியும் என்றான் அவன்.

"அதிருக்கட்டும் புலவர் ஏழுமலை என்பவர் உங்களுக்கு எழுபது ரூபாய் தரவேண்டுமே அக்கடன் தொகையை இப்போதாவது கொடுத்தாரா?" என்று கேட்டாள்.

"அவன் பன்னிரண்டு ரூபாய்தான் கொடுத்தான், என்றான் அவன்.2289-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/91&oldid=1317372" இலிருந்து மீள்விக்கப்பட்டது