பக்கம்:எச்சில் இரவு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


இவனே அழுது கொள்ள வேண்டியதுதான்," என்று கூறினாள்.

பிறகு அவர்களிருவரும் ஒரு குளக்கரைக்கு வந்து, ஆங்கிருந்த படிக்கட்டுகளின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

"இதுதான் திம்மராஜன் குளம்" என்று அவன் அவளிடம் கூறினான்.

"இந்தக் குளம், போரூர் தெப்பக் குளத்தை விடப் பெரிதாக இருக்கிறது" என்றாள் அவள்.

"அரசன் ஒருவன் வெட்டிய குளமாயிற்றே, பெரிதாக இல்லாமல் சிறிதாகவா இருக்கும்" என்றின் அவன்.

"அரசன் வெட்டிய குளமா இது ?" என்று அவள் கேட்டாள்.

"ஆமாம். கி.பி. 1515- ஆம் ஆண்டில் விஜய நகர சமஸ்தானத்தில் ஒர் அமைச்சனாயிருந்து, பிறகு அவ்வரசனின் கட்டளைப்படி. செங்கற்பட்டை அரசாண்ட திம்மராஜன் என்பவனால் வெட்டப்பட்ட குளந்தான் இந்தக் குளம். கலிங்கத்தில் அன்று சிந்திய ரத்தம், நம் நாட்டின் வீரத்தை நமக்கு நினைவூட்டுகிறது. திம்மராஜன் அன்று வெட்டிய இந்தக் குளம், அவனது கற்செயலே நமக்கு நினைவூட்டுகிறது. அவனைப் பற்றி நம் நாடும் பேசுகிறது; நாமும் இப்போது பேசுகிறோம். இக்குளத்தில் இருக்கும் தாமரைப் பூவுக்கு நாக்கிருந்தால், நம்மைப்போல் இதுவும் அவனது பெருமைகளை எடுத்துரைக்கும்" என்று கூறினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/94&oldid=1315963" இலிருந்து மீள்விக்கப்பட்டது