பக்கம்:எச்சில் இரவு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


அப்போது அவன் மனைவியோ, தண்ணீர்ப் புடவை கட்டிய தாமரைப் பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளை உற்றுப் பார்த்தான்.

"அத்தான்! நான், அந்த அம்மராஜன் குளத்தில் நீராடியிருக்கிறேன். ஆனால் இதுவரை இத் திம்மராஜன் குளத்தில் நீராடியதில்லை. இப்போது இக்குளத்தில் நான் நீராடட்டுமா ?" என்று கேட்டாள்.

"வேண்டாம். தாமரைக் குளத்தில் நீராடினுல் அடிக்கடி தாகமெடுப்பதோடு, வாதபித்தமும் அதிகரிக்கும். அல்லிக் குளத்தில் நீராடினாலும் அஜிர்ண பேதி உண்டாகும்" என்று கூறினான்.

"அப்படியென்றால், நான், ஆற்று நீரிலும் ஊற்று நீரிலுந்தான் குளிக்க வேண்டுமா ?" என்று கேட்டாள்.

"பகலில் நீ ஊற்று நீரிலும்; இரவில் என் உதட்டு நீரிலும் குளிப்பதுதான் நல்லது" என்று கூறினான்.

அப்போது, அக் குளத்திலிருந்த கவலையில்லாத தவளைகள் சத்தமிடத் தொடங்கின.

"அத்தான் ! நம் இன்ப உரையாடலுக்கு இடையூறு விளைவிக்கும் இத் தவளைகளைக் கல்லால் அடித்துக் கொல்லுங்கள" என்று கூறினாள்.

"பரிச்சித்து மகாராஜனைப் போல என்னையும் நீ ஒரு பைத்தியக்காரன் என்று எண்ணிவிட்டாயா ?" என்று கேட்டான்.

"அப்படியென்றால், அந்தப் பரிச்சித்து மகாராஜன் உண்மையிலேயே ஒரு பைத்தியக்காரன் தானா?" அவன் அப்படி என்ன பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டான்?" என்று அவள் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/95&oldid=1315957" இலிருந்து மீள்விக்கப்பட்டது