பக்கம்:எச்சில் இரவு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


"சூரிய குலத்தவனாகிய அந்தப் பரிச்சித்து மகா ராஜன், ஆயுத மகாராஜனின் மகள் சோபனை என்பவளைக் காட்டில் மணந்து அவளோடு ஒரு தடாகத்தில் நீராடும்போது அவள் நீரில் மறைய அவ்விடமிருந்த தவளைகள் அவளை விழுங்கி விட்டன என்று கருதி அவன் அக்குளத்திலிருந்த தவளைகளை யெல்லாம் கொலைபுரியச் செய்தானும்! அவன் ஒரு பைத்தியக்காரனாக இல்லாவிட்டால் அவ்வாறு செய் திருப்பானா?" என்று அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

"அத்தான்! அவன் எவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்பது, எனக்கு இப்போதுதான் புரிகிறது. அந்தப் பைத்தியக்காரனை ஒரு நாட்டின் மன்னனாக ஏற்றுக்கொண்ட மண்ணின் மைந்தர்களும், அவனுக்குப் பெண் கொடுத்த ஆயுத மகாராஜனும் பைத்தியக் காரர்களாகத்தான் இருக்க வேண்டும்" என்று கூறினாள்.

"சில நேரங்களில் சில பெரிய மனிதர்கள், அயோக்கியர்களே ஆட்சி பீடத்தில் அமர்த்தி விடுகிறார்கள் மடையர்களையும் மேதாவிகளாகக் கருதி விடுகிறார்கள்" என்று கூறியபடி அவன் அவ்விடத்தை விட்டு எழுந்தான். அவளும் எழுந்தாள். வெண்ணிலவும் வானத்தில் எழுந்தது.

அன்றிரவு குளிர் மிகவும் அதிகமாக இருந்தது.

அவளுக்கு அப்போது ஒரு போர்வை தேவைப்பட்டது.

அவனுக்கு அவளுடைய பார்வை தேவைப்பட்டது.

பருவசுகமும் தேவைப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/96&oldid=1315954" இலிருந்து மீள்விக்கப்பட்டது