பக்கம்:எண்ணக்குவியல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

எண்ணக்குவியல்

நடத்தும் ஆடவரும் முடத்தெங்குகளே! பெற்ற பிள்ளைகளுக்குச் சொத்துக் கொடுக்க மறுத்து. அவர்கள் மீது வன்னெஞ்சங் கொண்டு, அவர்களை நடுத்தெருவில் அலைய விட்டு, தன் சொத்துக்களைத் தானமும் தருமமும் செய்து வரும் தந்தைகளும் முடத்தெங்குகளே!

"மருமகனுக்குச் செய்தவைகளை மகனுக்கு இட்டு வயிறு எரியும் தாயும் உண்டானால், அவளும் ஒரு மடத்தெங்குதான்.”

"நம்பி இருக்கும் மணவாளனை வஞ்சித்து வெறுத்துப் பிறருக்குப் பயன்படும் பெண்களும் முடத்தெங்குகளே தான்,"

"போதும், போதும் தாத்தா; இவர்கள் எல்லாம் முடத்தெங்கு அனையவர்களே. நீங்கள் இப்படியே பொழுது விடியும்வரை சொல்லிக் கொண்டிருப்பீர்கள் போலத் தெரிகிறது. எல்லாவற்றிலும் பெரிய முடத்தெங்குகள் இருவரைப்பற்றி மட்டும் சொல்லுதல் போதும் தாத்தா!"

"பிறந்த பொன்னாட்டை மறந்து, பிறநாட்டிற்குத் தொண்டு செய்யும் பக்தனும், வளர்த்த இன்மொழியை மறந்து, பிற மொழிக்குத் தொண்டு செய்யும் அறிஞனுமே தலைசிறந்த முடந்தெங்குகள். தெரிகிறதா?"

“ஆம் தாத்தா! இது மன்னிக்க முடியாத குற்றம் தான்.”

"திடீரென அப்படிக் கூறிவிடாதே! குற்றம் முழுவதும் முடத்தெங்குகள் மீது இல்லை. அவை மூன்றாவது குற்றவாளிகளே. அவற்றிற்கு முன்னரே இரண்டுவகைக் குற்றவாளிகள் இருக்கின்றார்கள்.

"பெற்ற பிள்ளையை வளர்ப்போரும். வைத்த பிள்ளையை (தென்னம் பிள்ளையை) வளர்ப்போரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/11&oldid=1253603" இலிருந்து மீள்விக்கப்பட்டது