பக்கம்:எண்ணக்குவியல்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடத்தெங்கு

11

இளமையிலேயே சிறிது எச்சரிக்கையாய் இருந்து வளர்த்திருந்தால், அவற்றைக் கோணலிலிருந்து திருத்தி நேராக வளர்த்திருக்கலாம். இவர்களே முதற் குற்றவாளிகள்.”

"அவ்வாறு கண்காணித்து வளர்த்த பிள்ளைகளைக் கூட மரமேறிகள் சிலர் தங்கள் சுயநலங்கருதி இலகுவாய் ஏறி இறங்க எண்ணி, மிதித்து மிதித்துச் சாய்த்து வளைத்து விடுவதும் உண்டு. அதுபோலவே நன்கு வளர்க்கப்பெற்ற பிள்ளைகளைக்கூட, அதனதன் வாழ்க்கையில் ஆணைப் பெண்ணும். பெண்ணை ஆணும் வளைத்துக் கோணலாக்கி முடத்தெங்காகச் செய்துவிடுவதும் உண்டு. இதனால் இந்த மரமேறிகளும் மனையேறிகளும் இரண்டாங் குற்றவாளிகள் ஆகிறார்கள். மூன்றாவது குற்றந்தான் முடத்தெங்குகளைப் பொறுத்ததாகும்."

"ஆம் தாத்தா! உண்மைதான். இதற்கு என்ன செய்யலாம்?"

"உன்னைப் போன்ற இளைஞர்கள் நினைத்தால் இந்நாட்டில் முடத்தெங்குகளே இல்லாமற்செய்யலாம். இந்நாடு என்றதும் என் உடல் நடுங்குகிறது! தமிழன் ஒருவன் இந்நாட்டையே ஒரு முடத்தெங்கு எனப் பழி துாற்றி விட்டான். அதைச் சொல்லவே என் நாவெழவில்லை!"

"அது என்ன தாத்தா! தாய் நாட்டையா பழி துாற்றினான்? அதுவும் தமிழனா அப்படித் துாற்றியவன்? வியப்பாய் இருக்கிறதே!"

"ஆம் அப்பா? அவன் தமிழன்தான், அவன் பழி துற்றியதும் தமிழ் நாட்டைத்தான். அவன் சொல்லிய சொல்லும் இதுதான்."

"என் அருமைத் தமிழ் நாடே! என் தாய் நாடே எங்கெங்கோ இருந்துவந்த எவரெவர்க்கோ இடம் தந்து