பக்கம்:எண்ணக்குவியல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

எண்ணக் குவியல்

தொழிலுக்கும் துணை செய்து, வாணிகத்திற்கும் வகை செய்து, வாழ வழிசெய்து வருகின்ற நீ, பெற்ற பிள்ளைகளுக்குச் சிறிதும் பயன்படாமல், அவர்களை அயல் நாடுகளுக்கு அரைவயிற்று உணவுக்காக அநியாயமாய் ஏற்றுமதி செய்து அனுப்பிக்கொண்டிருக்கிறாயே! நீயும் தாயா. அல்லது முடத்தெங்கா?" என்ற சுடுசொல்லே அச்சொல். இப்பெரும் பழியைத் துடைக்க வேண்டியது எதிர்காலத் தலைவர்களாகிய இன்றைய இளைஞர்களின் பொறுப் பல்வைா? ஏன் நிற்கிறாய்?"

"வீடு வந்துவிட்டது தாத்தா! அதோ இடப்புறந்தான் திண்ணை. அப்படியே உட்காருங்கள். நான் போய் வருகிறேன். இன்று நான் இவ்வூருக்கு வந்தது எனக்கு ஒரு பேறு. உங்களோடு உரையாடியது ஒருபெரும்பேறு இதனால் நான் பெற்ற அறிவும் அதைவிடப் பெரும்பேறு ஆகும்."

"நான் முடத்தெங்காக வாழப்போவதில்லை; மற்றவர்களையும் முடத்தெங்காக வாழ விடுவதில்லை; யானும் முடத்தெங்குகளைத் தோற்றுவிப்பதுமில்லை என இன்று நான் உங்கள் முன்பு உறுதி கூறுகிறேன் தாத்தா! என்னையும் என்னைப்போன்ற இளைஞர்களையும் வாழ்த்துங்கள்! உங்களுக்கு என் வணக்கம் உரியது."

“ஆம் அப்பா! அப்படியே ஆகட்டும். பெற்ற நாட்டிற்குப் பெருமையையும், வளர்த்த மொழிக்கு வாழ்வையும், பிறந்த குடும்பத்திற்குப் பெருஞ்சிறப்பையும் தந்து, நீவிர் அனைவரும் நல்ல தமிழராய் நல்வாழ்வு வாழ வேண்டு மென்பதே எனது ஆசையாகும். உங்கள் வாழ்வு சிறக்கட்டும்!"

"வாழட்டும் தமிழ்நாடு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/13&oldid=1254055" இலிருந்து மீள்விக்கப்பட்டது